காளான் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 200 கிராம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. பூண்டு - 4 பல்
6. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
9. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
10. கடுகு - 1/4 தேக்கரண்டி
11. சோம்பு - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிதளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். காளானை நன்றாகக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும், சுத்தப்படுத்தி நறுக்கியக் காளானைச் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்கவும்.
4. அதன் பின்னர் தக்காளி சேர்க்கவும்.
5. அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு குழைந்ததும், மேலும் சிறிது உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் காளானுடன் சேரும் வரை மெலிதான தீயில் வைத்துக் கிளறவும்.
7. பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி வேக விடவும்.
8. காளான் வெந்ததும் உப்பு, காரம் சரிபார்த்து, சற்று சுண்ட வைத்து, அடுப்பை அணைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.