பூண்டுக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. 1. பூண்டு (தோலுரித்தது) – 1 கப்
2. புளி – எலுமிச்சை அளவு
3. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
4. சீரகத்தூள் – 2 தேக்கரண்டி
5. மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் – தேவையான அளவு
7. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டைப் போட்டு வதக்கவும்.
2. மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
3. பூண்டு வேகும் அளவு தண்ணீர் விடவும்.
4. புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.