பனீர் டிக்கா மசாலா
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பனீர் துண்டுகள் - 250 கிராம்
2. தயிர் - 1/4 கப்
3. துருவிய இஞ்சி - 1 மேசைக்கரண்டி
4. மல்ல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
குழம்புக்கு:
6. தக்காளி - 3 எண்ணம்
7. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
8. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
9. மல்லித்தூள் 1/2 தேக்கரண்டி
10. கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
11. சீரகம் - 1 தேக்கரண்டி
12. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
13. தயிர் - 3 மேசைக்கரண்டி
14. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
15. உப்பு - தேவையான அளவு
16. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. பனீரைத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. தக்காளியையும் பச்சை மிளகாயையும் நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்திரத்தில் பனீர் துண்டுகள், தயிர், துருவிய இஞ்சி, மல்லித்தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு போட்டு நன்றாகக் கலந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஊற வைத்த பனீர் மசாலாத் துண்டுகளை போட்டு வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் அரைத்த விழுதினைச் சேர்த்து கிளறவும்.
6. அதனுடன் மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், சீரகம், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
7. கடைசியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவும்.
8. இறக்கிய பின் வறுத்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
குறிப்பு: பனீர் டிக்கா மசாலா, நாண், சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.