முருங்கைக்காய் தொக்கு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் (சதைபற்றான, இளசான காய்) - 4 எண்ணம்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உளுந்து - 1/2 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கருவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, குக்கரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
2. வேகவைத்த காயிலிருந்து சதைப்பகுதியை வழித்தெடுத்து, தனியாக வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
5. பிறகு, அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் வழித்தெடுத்த காயின் சதைப்பகுதி, சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் சிறிது நீர் சேர்த்து வேகவிடவும். (காய் வேக வைத்த தண்ணீர் இருந்தால், அதைச் சேர்க்கலாம்)
8. எல்லாம் சேர்ந்து தொக்கு பதத்திற்கு வரும்போது, கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு: இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.