மோர் ரசம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. புளித்த தயிர் - 1 கப்
2. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
3. உப்பு - தேவையான அளவு.
4. மல்லித் தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு.
வறுத்து பொடிக்க
5. துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
6. மல்லி விதை - 1 தேக்கரண்டி
7. மிளகு - 1/2 தேக்கரண்டி
8. சீரகம் -1/2 தேக்கரண்டி
தாளிக்க
9. எண்ணெய் - 1 தேக்கரண்டி
10. கடுகு - 1/2 தேக்கரண்டி
11. சீரகம் - 1/2 தேக்கரண்டி
12. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
13. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
14. கறிவேப்பில்லை - சிறிதளவு.
செய்முறை:
1. முதலில் புளித்த தயிரில் 3/4 கப் தண்ணீரைச் சேர்த்து மோராகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்தெடுத்து, நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்தெடுத்துக் கொள்ளவும்.
3. முன்பே கரைத்து வைத்துள்ள மோரில் மஞ்சள் தூள், வறுத்து பொடித்த ரசப்பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுச் சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கடுகு வெடித்ததும் மோர் கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு:
1. இந்த ரசத்தை நன்றாகப் புளித்தத் தயிரை மோராக மாற்றிச் செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
2. இஞ்சி வாசனை பிடிப்பவர்கள், தாளிக்கும் போது இஞ்சியைச் சிறிதளவு துருவிச் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.