பாகற்காய் ரசம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. நீளப்பாகற்காய் – 250 கிராம்
2. மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
3. புளி – கோலிக்குண்டு அளவு
4. மல்லித் தழை – சிறிதளவு
5. உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
6. மிளகாய் வற்றல் – 3 எண்ணம்
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. வெந்தயம் – 1 தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
10. எண்ணெய் – தேவையான அளவு
11. கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
1. பாகற்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி வேகவிடவும்.
2. பாகற்காய் வெந்து, புளிக்கரைசல் ரசம் பதம் வந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
3. மேலாக மல்லித் தழை தூவவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.