பச்சைச் சுண்டைக்காய் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சைச் சுண்டைக்காய் - 12 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
3. கீறிய பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. சீரகம் - 1/4 தேக்கரண்டி
6. புளி - சிறிய எலுமிச்சை அளவு
7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
10. தக்காளி - 2 எண்ணம்
11. துவரம்பருப்பு (வேகவைத்து மசித்தது) - 2 மேசைக்கரண்டி
12. மல்லித்தழை - சிறிதளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சைச் சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கி, தயிரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
2. சின்ன வெங்காயம் தோல் உரித்தும், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
4. தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
6. வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் ஊறவைத்த சுண்டைக்காயை தயிர் நீக்கிச் சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
7. பின்னர் அதில் அரைத்த தக்காளி விழுது, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
8. அதன் பிறகு புளிக்கரைசல், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு சேர்த்து, நன்றாகக் கொதி வந்த பின் மல்லித்தழை தூவி, இறக்கிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.