வதக்கிய காரக்குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
2. பூண்டு – 10 பல்
3. தக்காளி – 4 எண்ணம்
4. சிறிய கத்தரிக்காய் -10 எண்ணம்
5. புளி – எலுமிச்சை அளவு
6. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
7. மல்லித்தூள் – 1 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
10. தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி
11. முந்திரிப்பருப்பு – 4 எண்ணம்
12. கசகசா – 2 தேக்கரண்டி
13. சோம்பு – 1/4 தேக்கரண்டி
14. மிளகு - 1/4 தேக்கரண்டி
15. பூண்டு – 2 பல்.
தாளிக்க:
16. கடுகு – 1/2 தேக்கரண்டி
17. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
18. சோம்பு – 1/2 தேக்கரண்டி
19. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து வைக்கவும்.
2. கத்தரிக்காயைக் காம்பு நறுக்கிக் கீறிக் கொள்ளுங்கள்.
3. புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
4. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரையுங்கள்.
5. எண்ணெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
6. பின்னர் தக்காளி, கத்தரிக்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
7. கத்தரிக்காய் நன்கு வதங்கும் பொழுது மல்லித்தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, மிளகாய்தூள் சேர்க்கவும்.
8. பச்சை வாசனை போக வதங்கிய பிறகு, புளித்தண்ணீர் சேர்த்து, அதுவும் கொதித்த பின் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நன்கு அரைத்து சேருங்கள்.
9. ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.