வெற்றிலை நெல்லி ரசம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. முழு நெல்லிக்காய் - 10 எண்ணம்
2. வெற்றிலை - 20 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. பூண்டு - 6 பல்
5. வால் மிளகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
9. மல்லித்தழை - சிறிது
10. கறிவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
11. நெல்லிக்காயை விதை நீக்கிச் சாறு எடுத்து வைக்கவும்.
2. கறிவேப்பிலை, மல்லித்தழை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வெறும் வாணலியில் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இலேசாக வறுக்கவும்.
4. பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
5. அவையனைத்தும் நன்றாக வதங்கியதும் எடுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
6. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய்ச் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும்.
7. அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கிப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.