முருங்கைக்காய் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் - 3 எண்ணம்
2. வெங்காயம் - 100 கிராம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. சோம்பு - 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்தூள் - 1 மேசைக்கரண்டி
8. தேங்காய்ப் பால் = 1/2 கப்
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முருங்கைக்காயைச் சிறிய துண்டுகளாக வெட்டி, நடுவேக் கீறிக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் வெங்காயம், முருங்கைக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
5. பின்னர் அதனுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிட்டு மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
6. பின்னர் அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறவும்.
7. கொத்தமல்லி இலையைச் சேர்த்து கிளறி விடவும். தாளித்த கடுகு மற்றும் கருவேப்பிலையை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.