காளான் குழம்பு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1/4 மேசைக்கரண்டி
6. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
7. கரம் மசாலாத் தூள் - 2 மேசைக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
9. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
10. மல்லித்தழை - சிறிது
11. வெங்காய்த்தாள் - சிறிது
12. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. காளானைக் கழுவி நறுக்கி வைக்ககவும்.
2. வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மல்லித்தழை மற்றும் வெங்காயத்தாளைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்.
5. சிறிது வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
7. பின்பு காளானையும், அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
8. காளான் சிறிது வதங்கியதும் கரம் மாசலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
9. பின்பு தேவையான அளவு நீர் விட்டு, காளான் வேகும் வரை கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து குழம்பு போல் வரும்போது மேலாக மேலே மல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு : பரோட்டா, சப்பாத்தி, நாண் போன்றவைகளுடன் இக்குழம்பு சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.