காய்கறிச் சால்னா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. காய்கறி – 1 கப் (காலிபிளவர், உரித்த பச்சை பட்டாணி, கேரட் என தேவையானதைச் சேர்த்துக் கொள்ளலாம்)
2. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்.
3. தக்காளி – 2 எண்ணம்.
4. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி.
5. மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி.
6. மல்லித் தூள் – 1/4 தேக்கரண்டி.
7. கரம் மசாலாத் தூள் – 1/4 தேக்கரண்டி.
8. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி.
9. தேங்காய்ப் பால் – 1 கப்.
10. சீரகம் – 1/4 தேக்கரண்டி.
11. பட்டை – 1 சிறிய துண்டு.
12. கிராம்பு – 2எண்ணம்.
13. அன்னாச்சி பூ – 1எண்ணம்.
14. உப்பு – தேவையான அளவு.
15. எண்ணெய் – சிறிது.
செய்முறை:
1. காய்கறிகளை பொடியாக நறுக்கி, முக்கால்வாசி அளவு வேகவைத்து, பின் தண்ணீரை வடித்துத் தனியே வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
4. தேங்காயைத் துருவி அரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும்.
5. ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும்.
6. சூடான எண்ணெயில் பட்டை, கிராம்பு, அன்னாச்சி பூ, சீரகம் சேர்க்கவும்.
7. சீரகம் பொரிந்தபின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
8. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. தக்காளி நன்கு வதங்கிய பின் இதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி விடவும்.
10. தேங்காய்ப் பாலை இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க விடவும்.
11. தேங்காய்ப்பாலின் பச்சை வாடை மடங்கி, நல்ல கூட்டுப் போல் கெட்டியாக வரும்போது, வேக வைத்திருக்கும் காய்கறிகளை இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் மிதமான நெருப்பில் அடுப்பில் வைத்திருக்கவும்.
12. தேவையான அளவு உப்பினை சால்னாவுடன் கலந்து கொள்ளவும்.
குறிப்பு:
புரோட்டா, சப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு இந்த காய்கறிச் சால்னா (வெஜிடபுள் சால்னா) நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.