மொச்சைக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மொச்சை -1/2 கோப்பை
2. கத்திரிக்காய் (பிஞ்சாக) - 5 எண்ணம்
3. பூண்டு - 9 பல்
4. சின்ன வெங்காயம் - 8 எண்ணம்
5. கறிவேப்பிலை -1 கொத்து
6. தக்காளி -1 எண்ணம்
7. உப்பு -1 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
9. புளிச்சாறு - 2 மேசைக்கரண்டி
10. சாம்பார் மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
11. எண்ணெய் -1 1/2 மேசைக்கரண்டி
12. சோம்பு -1 தேக்கரண்டி
13. சீரகம் -1/2 தேக்கரண்டி
14. வெந்தயம் -1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. மொச்சையை 6 மணிநேரம் ஊற வைக்கவும்.
2. குக்கரில் 2 விசில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. கத்திரிக்காயை நான்காக வெட்டிக் கொள்ளவும்.
4. வெங்காயம், பூண்டு தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.
5. தக்காளியைச் சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளிசம் செய்யவும்.
7. கறிவேப்பிலை, வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
8. பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
9. கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
10. பின்னர் புளிச்சாறு, மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
11. கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
12. குழம்பு கெட்டியானதும் இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.