மோர்க் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கெட்டியான தயிர் - 2 கப்
2. வெண்டைக்காய் - 20 எண்ணம்
3. பெருங்காயப் பொடி - சிறிதளவு
4. தேங்காய் - 1/2 கப் துருவியது
5. பச்சை மிளகாய் - 10 எண்ணம்
6. சீரகம் - 1 கரண்டி
7. மல்லித்தூள் - 1/2 கரண்டி
8. கடுகு - 1/2 கரண்டி
9. உளுந்தம் பருப்பு - 1/2 கரண்டி
10. காய்ந்த மிளகாய் - 2 எண்ணம்
11. கறிவேப்பிலை - சிறிது
12. இஞ்சி - சிறிய துண்டு
13. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
1. தயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கடைந்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
2. வெண்டைக்காயைக் கழுவி, தண்ணீர் போகத் துடைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வறுத்து தனியே வைக்கவும்.
3. தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தூள், இஞ்சி போன்றவைகளை விழுது போல் அரைத்து வைக்கவும்.
4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கவும்.
6. கடைந்து வைத்த மோரைச் சேர்த்து, அடுப்பைக் குறைத்து வைத்துக் கொதிக்க விடவும்.
7. நுரை பொங்கி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும்.
குறிப்பு
வெண்டைக்காய்க்கு பதில், வறுத்த சுண்டைக்காய் வற்றல், வேகவைத்த தடியங்காய் (வெள்ளைப் பூசணி), பக்கோடா போன்றவைகளைச் சேர்த்தும் செய்யலாம்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.