மொச்சை மசாலா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. காய்ந்த மொச்சை - 250 கிராம்
2. வெங்காயம் - 100 கிராம்
3. பூண்டு - 4பல்
4. இஞ்சி- சிறிது
5. மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
6. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
7. சோம்புத் தூள் - 1 தேக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
10. பட்டை - சிறிது
11. கடலை மாவு - 25 கிராம்
12. எண்ணெய் - தேவையான அளவு
13. கருவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதல் நாள் இரவு மொச்சையைத் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, மறுநாள் நன்றாக வேகவைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பட்டை சேர்த்துத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன்வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
4. பின்னர் அதில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, வெந்த மொச்சை,மிளகாய்த்தூள், மல்லித்தூள்,சோம்புத்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டுக் கெட்டியானதும் கடலை மாவு கரைத்து ஊற்றவும்.
5. கடைசியாக எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிட்டு, மல்லித்தழை, கருவேப்பிலை போட்டு இறக்கவும்.
குறிப்பு:
* மொச்சை மசாலா சப்பாத்தி, பூரிக்கு மிகச்சுவையாக இருக்கும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.