வெங்காய சாம்பார்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு-1 கோப்பை
2. சின்ன வெங்காயம் -1 கோப்பை
3. தக்காளி -1 நறுக்கியது
4. சாம்பார்பொடி- 1 1/2 தேக்கரண்டி
5. புளி - நெல்லிக்காய் அளவு
6. மஞ்சள்த்தூள் -1/4 தேக்கரண்டி
7. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
9. எண்ணெய் -1 மேசைக்கரண்டி
10. கடுகு -1/2 தேக்கரண்டி
11. சீரகம் -1/4 தேக்கரண்டி
12. வெந்தயம் -1/4 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. துவரம் பருப்பினை வேக வைத்து வைக்கவும்.
2. புளியை சிறிது தண்ணீர் ஊற்றி வைத்துப் பின்னர் கரைத்துக் கொள்ளவும்.
3. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தது, அதில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து லேசாக சிவந்து வரும் வரை வதக்கவும்.
6. தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
7. தக்காளியைத் தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
8. வேகவைத்த பருப்பு, புளிச்சாறு, சாம்பார் பொடி, 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
9. தேவையெனில், இறக்கும் போது மல்லி இலையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.