பச்சை சுண்டைக்காய் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சை சுண்டைக்காய் - 1 கப்
2. புளி - எலுமிச்சைப்பழ அளவு
3. மல்லித்தூள் - 2 கரண்டி
4. மிளகாய்த்தூள் - 1 கரண்டி
5. மஞ்சள்தூள் - 1/4 கரண்டி
6. தேங்காய் - 1/2 மூடி
7. உப்பு - தேவையான அளவு
8. நல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி
தாளிக்க:
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. புளியைக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் சுண்டைக்காயை லேசாக நசுக்கிப் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் எடுத்துத் தனியே வைக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
5. அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரைத்து வைத்தப் புளித்வ் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, அரைத்த தேங்காய், வதக்கிய சுண்டக்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
6. எண்ணெய் நன்றாகப் பிரிந்து வரும்போது இறக்கவும்.
குறிப்பு:
பச்சை சுண்டைக்காய் குழம்பு மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.