பட்டன் காளான் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பட்டன் காளான் - 2 கிண்ணம்.
2. வெங்காயம் - 1 எண்ணம்.
3. தக்காளி - 1 எண்ணம்.
4. இஞ்சி - சிறிது.
5. பூண்டு - 3 பற்கள்.
6. மிளகாய்த்தூள் - 1 கரண்டி.
7. மஞ்சள்தூள் - 1/4 கரண்டி.
8. எண்ணெய் - 3 கரண்டி.
9. உப்பு - தேவைக்கேற்ப.
10. கறிவேப்பில்லை - சிறிது.
செய்முறை:
1. பட்டன் காளானைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பில்லை, தக்காளி போட்டு வதக்கவும்.
4. அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
5. காளானைச் சேர்த்து வதக்கி விடவும்.
6. பின்னர் அதில் சிறிது நீர் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு வேகவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.