காலிஃபிளவர் ரசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காலிஃபிளவர், பொடியாக நறுக்கியது – 1 கப்
2. வேகவைத்த துவரம் பருப்பு – 1/4 கப்
3. தக்காளி – 1 எண்ணம்
4. பூண்டு – 5 பற்கள்
5. புளி – 1 தேக்கரண்டி
6. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
8. சர்க்கரை – 1/4 தேக்கரண்டி
9. மல்லித்தழை – 2 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு
ரசப்பொடிக்கு:
11. கொத்தமல்லி (தனியா) – 1 தேக்கரண்டி
12. மிளகு – 1 தேக்கரண்டி
13. சீரகம் – 1/2 தேக்கரண்டி
14. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
தாளிக்க:
15. எண்ணெய் – 2 தேக்கரண்டி
16. பட்டை – 1 சிறிய துண்டு
17. சோம்பு – 1/2 தேக்கரண்டி
18. கருவேப்பில்லை – சிறிது
செய்முறை:
1. புளியை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீரில் புலி கரைசல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. காலிஃபிளவரைக் கொதிநீரில் உப்பு சேர்த்து மூழ்க வைக்கவும்.
3. ஒரு கப் தண்ணீரில், ஒரு பெரிய பாத்திரத்தில் காலிஃபிளவர், மல்லித்தழை, தக்காளி, மிளகாய், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்துத் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
5. காலிஃபிளவர் வெந்தவுடன், புளிக்கரைசல் சேர்க்கவும்.
6. ரசப்பொடிக்கு அரைக்கவேண்டிய பொருட்களைக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
7. கொதிக்கும் ரசத்தில் இந்தப் பொடியினை சேர்த்து, வேகவைத்த பருப்பு சேர்த்து, தண்ணீர் அளவினைச் சரி செய்யவும்.
8. கடைசியாக, சர்க்கரை சேர்த்துக் கிளறிவிட்டு, மல்லித்தழைகளை மேலாகத் தூர்வி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.