சோயா குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சோயா - 1 கோப்பை
2. இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
6. வெங்காயம் - 1 எண்ணம்
7. மல்லித்தழை - சிறிது
அரைக்க:
8. சோம்பு - 1தேக்கரண்டி
9. சீரகம் - 1/2தேக்கரண்டி
10. பாதாம் - 4 எண்ணம்
11. தேங்காய் - 2 மேசைக்கரண்டி
12. மிளகு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க
13. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
14. பட்டை - சிறிது
15. கிராம்பு - 4 எண்ணம்
16. இலவங்க இலை - சிறிது
17. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. சோயாவை 20 நிமிடம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்.
3. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் காய வைத்துத் தாளிதம் செய்யவும்.
5. கறிவேப்பிலை, இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
7. பின்னர் வெட்டி வைத்துள்ள சோயாவைச் சேர்த்து சிறிது வதக்கி, உப்பு மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து, அத்துடன் அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
8. மசாலா வாசனை போகவும் இறக்கி வைத்து, அதில் மல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.