காளான் குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 200 கிராம்
2. தக்காளி - 1 எண்ணம்
3. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
4. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
9. மல்லித்தழை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
அரைக்க:
11. தேங்காய் துருவல் - 1/4 கப்
தாளிக்க:
12. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
13. பட்டை - சிறியது
14. கிராம்பு - 2 எண்ணம்
15. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. காளானை நன்றாகக் கழுவி வெட்டி வைக்கவும்.
2. தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
3. தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, பட்டை போட்டு பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பைக் குறைத்து வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்துக் கிளறவும்.
8. காளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
9. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
10. இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.