திருநெல்வேலிப் புளிக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
2. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
3. மல்லி - 1/4 தேக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1 1/4 தேக்கரண்டி
5. கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் - 6 எண்ணம்
7. மிளகு - 1/2 தேக்கரண்டி
8. சீரகம் - 1/4 தேக்கரண்டி
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
11. பூண்டு - 20 பற்கள்
12. கறிவேப்பிலை - சிறிது
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, 2 கிண்ண அளவில் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பூண்டுகளைத் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் மல்லி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் போன்றவற்றை அரைப்பதற்கு முன்பாக வறுத்து இறக்கிக் குளிர வைக்க வேண்டும்.
4. வறுத்த பொருட்கள் குளிர்ந்த பின்பு அதை படை போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
5. அத்துடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
6. வாணலியை தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். தட்டி வைத்துள்ள பூண்டுகளைச் சேர்த்து சிறிது நேரம் தாளிக்க வேண்டும்.
7. அதில் புளிச்சாறு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டியதுதான்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.