மோர்க் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கெட்டித் தயிர் - 2 கப்
2. வெள்ளைப்பூசனி (தடியங்காய், பரங்கிக்காய் என்றும் சொல்வார்கள்) -250 கிராம்
3. தேங்காய்த் துருவல் - 1 கப்
4. பச்சை மிளகாய் - 6 எண்ணம்
5. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
6. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
7. மல்லி விதை - 1 தேக்கரண்டி
8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
9. இஞ்சி - 25 கிராம்
10. பெருங்காயம்- தேவையான அளவு
11. மஞ்சள் தூள்- தேவையான அளவு
12. உப்பு- தேவையான அளவு
13. மல்லித் தழை, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை- தேவையான அளவு(தாளிக்க)
(வெள்ளைப்பூசனிக்குப் பதிலாக வெண்டைக்காய், பூசனிக்காய் போன்றவையும் பயன்படுத்தலாம்.)
செய்முறை:
1.துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
2. வெள்ளைப் பூசனியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி இலேசாக வேக வைத்துக் கொள்ளவும்.
3. ஊறவைத்த பருப்புகள், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், மல்லி விதை, சீரகம் எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
4. தயிரை நன்கு கட்டியில்லாமல் கடைந்து, தேவையான உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது, வேகவைத்த காய் சேர்த்து சூடாக்கவும். இலேசாகக் கிளறி விடவும்.
5. பொங்கி வரும்போது மல்லித் தழை சேர்க்கவும்.
6. சிறிது நல்லெண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டால் மேலும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.