கொண்டைக்கடலைப் புளிக்குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கொண்டைக் கடலை - 200 கிராம்
2. வெங்காயம் - 1எண்ணம்
3. தக்காளி - 2 எண்ணம்
4. மிளகாய்த் தூள் - 3 கரண்டி
5. புளி - தேவையான அளவு
6. தேங்காய் துருவல் - 1 கரண்டி
7. முந்திரிப்பருப்பு - 2 எண்ணம்
8. கடுகு - 1/2 மேசைக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
10. கறிவேப்பிலை - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
13. மல்லித்தழை - தேவையான அளவு.
செய்முறை:
1. கொண்டைக் கடலையை குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைத்துப் பின்னர் தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
2. புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் தாளிசம் செய்தவைகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. அதில் வேகவைத்தக் கொண்டைக்கடலையைச் சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க விடவும்.
7. குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும்.
8. சில நிமிடங்களுக்குப் பின்பு, அதில் தேங்காய்த் துருவல், முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிடவும்.
9. குழம்பு சிறிது கெட்டியானதும் கீழே இறக்கி வைத்து மேலாக மல்லித்தழை தூவி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.