அப்பளக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அப்பளம் – 4 எண்ணம்
2. புளி – 50 கிராம்
3. கடுகு – 1/4 தேக்கரண்டி
4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் – 6 எண்ணம்
9. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
10. பெருங்காயத்தூள் – சிறிது
11. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை – சிறிது
13. பொடித்த வெல்லம் – 1 தேக்கரண்டி
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பருப்பு வகைகள், பெருங்காயத்தூள், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
2. புளியை ஊற வைத்து வடிகட்டிய புளிக் கரைசலை விட்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
3. கொதிக்க ஆரம்பித்தவுடன், அப்பளத் துண்டுகளைப் போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
4. அதில் பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.