பன்னீர் பட்டாணி மசாலா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பன்னீர் - 500 கிராம்
2. உருளைக்கிழங்கு - 3 எண்ணம்
3. பச்சைப் பட்டாணி - 1 கோப்பை
4. பெரிய வெங்காயம் - 6 எண்ணம்
5. தக்காளி - 6 எண்ணம்
6. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
8. கரம்மசாலா - 2 தேக்கரண்டி
9. மல்லித்தழை - சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி, நறுக்கிய துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், சிறிது எண்ணெய் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிதமான தீயில் பன்னீர் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொறித்து எடுக்கவும்.
3. வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. அதனுடன் தக்காளி போட்டு வதக்கவும்.
5. அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா போட்டு வதக்கி, உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி, உப்பு போட்டு சிறிது நேரம் குக்கரில் வேக வைக்கவும்.
6. பின்னர் வறுத்து எடுத்தப் பன்னீரைச் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும், மல்லித்தழை போட்டு இறக்கவும்.
குறிப்பு: சப்பாத்தி, பூரிக்கு இந்த மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.