மிளகுக் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அப்பளம் – 4 எண்ணம்
2. புளி – 50 கிராம்
3. கடுகு – 1/4 தேக்கரண்டி
4. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் – 6 எண்ணம்
9. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
10. பெருங்காயத்தூள் – சிறிது
11. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை – சிறிது
13. பொடித்த வெல்லம் – 1 தேக்கரண்டி
14. எண்ணெய் - தேவையான அளவு
15. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் காய்ந்ததும், மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்கவும். பின், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அந்தக் கலவையை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.
2. அதே வாணலியில், நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, மிளகாய் வற்றல், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
3. அடுத்ததாக, பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி, தோல் உறித்த பூண்டு, மிளகு சேர்த்து வதக்கவும்.
4. அதன் பின்னர், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
5. சின்ன வெங்காயம் சிவந்து வந்ததும், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
6. அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
7. அதன் பின்னர், கரைத்து வைத்த புளி கரைசலைச் சேர்த்து, தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
8. வறுத்து வைத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
9. அரைத்தப் பொடியினைக் கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து, நன்கு கலந்து மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
10. அடுப்பை அணைப்பதற்கு முன்பு, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
குறிப்பு: குளிர்காலத்திற்கு இந்த மிளகுக் குழம்பு ஏற்றது. சளி, இருமல் வராமல் பாதுகாக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.