கொள்ளு ரசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கொள்ளு (கானம்) வேக வைத்த தண்ணி - 2 கப்
2. புளி - சிறிது
3. தனியா - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. மிளகு - 1/2 தேக்கரண்டி
7. பூண்டு - 6 பற்கள்
8. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
9. பெருங்காயம் - சிறிது
10. மஞ்சள் தூள் - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
13. கருவேப்பிலை - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. தனியா, சீரகம், மிளகு, பூண்டு ஒரு வரமிளகாய், மஞ்சள் தூள் உப்பு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
2. கொள்ளு வேகவைத்த தண்ணீருடன் அரைத்து வைத்ததைக் கலந்து வைக்கவும்.
3. புளியை பத்து நிமிடம் ஊறவைத்து, அந்தத் தண்ணீரைச் சேர்க்கவும்.
4. ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, பெருங்காயம், கருவேப்ப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
5. பின்னர் அதில் கலந்து வைத்திருக்கும் கொள்ளுத் தண்ணீர் கலவையைச் சேர்த்து அடுப்பில் சிறிது நேரம் வைக்கவும்.
6. நுரை கட்டியவுடன், கொதிக்க விடாமல் இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.