தக்காளி ரசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 200 கிராம்
2. பூண்டு - 6 பற்கள்
3. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
4. சாம்பார்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. ரசப்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - சிறிது
7. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. நறுக்கிய தக்காளி, 3 பூண்டு, பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல் ஒன்றாகச் சேர்த்து அரைத்து வடிகட்டி வைக்கவும்.
2. அதனுடன் உப்பு, ரசப்பொடி, சாம்பார்த்தூள் போட்டுக் கலந்து வைக்கவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மீதமிருக்கும் பூண்டு, 1 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்துக் கலந்து வைத்த தக்காளிச் சாற்றை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
4. கடைசியாக, மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.