பருப்பு ரசம்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 50 கிராம்
2. தக்காளி - 3 எண்ணம்
3. மிளகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. பூண்டு - 6 பற்கள்
6. கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - சிறிது
8. பெருங்காயத்தூள் - சிறிது
9. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
12. கருவேப்பிலை - சிறிது
13. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் துவரம் பருப்பு மற்றும் தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைக்கவும்.
2. வேகவைத்த பருப்பைத் தனியாகவும், தக்காளியைத் தனியாகவும் நன்கு மசித்துக் கொள்ளவும்.
3. மசித்த இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.
4. சிறிய கல் உரலில் சீரகம், மிளகு, மல்லித்தழை, பூண்டு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
6. உரலில் இடித்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும்.
7. அதன் பிறகு மசித்து வைத்திருக்கும் பருப்பு, தக்காளிக் கரைசலைச் சேர்க்கவும்.
8. ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
9. கொதிப்பதற்கு முன்பாக நுரைத்து வரும் பொழுது, மல்லித்தழையைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.