தக்காளி ரசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. நாட்டுத் தக்காளி - 4 எண்ணம்
2. பூண்டு - 4 பற்கள்
3. ரசப்பொடி - 1 மேசைக்கரண்டி
4. புளிக்கரைசல் - சிறிது
5. கருவேப்பிலை - சிறிது
6. மல்லித்தழை - சிறிது
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
9. பெருங்காயத்தூள் - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளியை நறுக்கி மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் பூண்டு, சில் கருவேப்பிலை இதழ்கள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
2. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, மிளகாய் வற்றல் தாளித்து, சிறிது பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
3. இதில் அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
4. புளிக்கரைசலை சேர்த்துக் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பச்சை வாசனை போகக் கொதிக்க விடவும்.
5. கடைசியில் ரசப்பொடியைத் தூவி ரசம் நுரைத்து வரும் நேரத்தில் மல்லித்தழைகளைச் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.