மிளகு ரசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சீரகம் - 1 மேசைக்கரண்டி
2. மிளகு - 1 மேசைக்கரண்டி
3. பூண்டு - 5 பற்கள்
4. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
5. தக்காளி - 3 எண்ணம்
6. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
8. ரசப்பொடி - 1 மேசைக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. புளிக்கரைசல் - 50 மி.லி
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. தக்காளியைத் துண்டுகளாக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. மிளகாய் வற்றல், மிளகு, பூண்டு, சீரகம் ஆகியவற்றைத் தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் சீரகம். மிளகு சேர்த்து அரைத்த கலவையைச் சேர்க்கவும்.
5. அதன் பிறகு, அரைத்த தக்காளிச் சாற்றைக் கலக்கவும்.
6. அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ரசப்பொடி என்று அனைத்தையும் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
7. ரசம் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து இறாக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.