மணத்தக்காளிக் கீரைச் சாறு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மணத்தக்காளி கீரை - 1 கட்டு
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
5. பூண்டு - 3 பல்
6. கடுகு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
9. சமையல் எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. கருவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. மணத்தக்காளிக் கீரையைக் காம்பு நீக்கி நீரில் நன்றாகச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, பூண்டு இவைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் சமையல் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மிளகாய் வற்றல், கடுகு உளுத்தம்பருப்பு போட்டுக் கடுகு வெடித்தவுடன் கருவேப்பிலை, பெருங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
4. அதில் நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி போட்டு நன்றாகக் கிளறவும்.
5. பின்னர் அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
6. பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மணத்தக்காளிக் கீரையைப் போட்டு மூடியிட்டு மிதமான தீயில் நன்றாக வேகவைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.