மிளகு ரசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மிளகு - 1 / 2 தேக்கரண்டி
2. சீரகம் - 1 தேக்கரண்டி
3. பூண்டு - 3 பல்
4. மல்லி - 1 / 2 தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
6. மஞ்சள் தூள் - 1 /4 தேக்கரண்டி
7. கடுகு - 1 /2 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் - 1 /4 தேக்கரண்டி
9. தக்காளி – 1 எண்ணம்
10. எண்ணெய் – 1 தேக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
12. கொத்தமல்லி தழை – சிறிது
13. கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
1. சீரகம், மிளகு, மல்லி ஆகியவற்றைத் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. மிளகாய் வற்றலைக் கிள்ளி வைக்கவும்.
4. புளியைஹ் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
6. இந்த தாளிசத்துடன் நறுக்கிய மிளகாய் வற்றல், நசுக்கி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
7. பூண்டு வதங்கிய பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.
8. அதன் பின்னர், பெருங்காயத்தூள், அரைத்த பொடியைச் சேர்த்து வதக்கவும்.
9. இப்பொழுது கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றித் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
10. ரசம் நுரைத்து பொங்கி வரும்போது, மேலாக மல்லித் தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.