தயிர் உருளைகிழங்கு மசாலா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. உருளை கிழங்கு - 1/2 கிலோ
2. பெரிய வெங்காயம் - 2
3. தயிர் - 1/2 கப் (சிறிது புளித்திருப்பின் நல்லது)
4. இஞ்சி - பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
5. மிளகாய்த் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
6. மிளகுத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
7. கரம் மசாலாத் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
8. மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நான்கு பகுதியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. எண்ணெய்யைக் காய வைத்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
4. அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.
6. கடைசியாகக் கரம் மசாலாத் தூள், தயிர் சேர்த்துச் சுருளக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: பிரட், பூரி, சப்பாத்தி போன்றவைகளுக்குத் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.