பிரண்டைக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பிரண்டை துண்டுகள் - 10 எண்ணம்
2. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
3. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
4. மல்லி - 1 மேசைக்கரண்டி
5. புளி - எலுமிச்சை அளவு
6. எள் - 1 தேக்கரண்டி
7. வெல்லம் - சிறிது
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுத்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
10. நல்லெண்ணய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. பிரண்டையை தோலுரித்துச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. தேங்காய் துருவல், மிளகாய்வற்றல், மல்லி மூன்றையும் எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் நல்லெண்ணைய் விட்டுக் கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. அத்துடன் பிரண்டையைச் சேர்த்து வதக்கவும்.
5. புளியைக் கரைத்து உப்புடன் சேர்த்து வதக்கிய பிரண்டையுடன் கலந்து கொதிக்க விடவும்.
6. அரைத்து வைத்திருக்கும் தேங்காய், மிளகாய் வற்றல், மல்லி கலந்த விழுதைச் சேர்க்கவும்.
7. நன்கு கொதி வந்ததும் எள், வெல்லம் ஆகியவற்றைத் தூள் செய்து சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.