முருங்கைக்காய் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் - 1 எண்ணம்
2. தேங்காய்பால் - 100 மி.லி.
3. கருவேப்பிலை - சிறிதளவு
4. பூண்டு - 3 எண்ணம்
5. மிளகாய்த்தூள்- 2 மேசைக்கரண்டி
6. புளி - எலுமிச்சையளவு
7. வெங்காயம் - 1 எண்ணம்
8. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. சோம்பு - 1/2 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையானளவு.
செய்முறை:
1. முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
3. புளியைச் சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு பொட்டு வெடித்ததும், சோம்பு, கருவேப்பிலை, பூடு, நறுக்கி வைத்திருக்கும் மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் வெட்டிச் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்காய்த் துண்டுகளைக் கலந்து பொரிக்கவும்.
6. முருங்கைக்காய் ஓரளவு பொரிந்ததும், அத்துடன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
7. புளிக்கரைசல், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.
8. கொதித்து வரும் போது, அத்துடன் தேங்காய்ப் பால் கலந்து நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.