பூண்டு மிளகுக் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சின்ன வெங்காயம் - 100 கிராம்
2. பூண்டு - 100 கிராம்
3. மிளகு - 1/2 மேசைக் கரண்டி
4. சீரகம் - 1/2 மேசைக் கரண்டி
5. தக்காளி - 1/4 கிலோ
6. தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
7. மிளகாய்த்தூள் 1மேசைக்கரண்டி
8. மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
9. நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியை அடுப்பில் வைத்து அதில் மிளகு சீரகம் போட்டு வெடிக்கத் துவங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துப் பிரட்டி, அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து ஆற வைத்துப் படை போல் அரைக்கவும்.
3. பாத்திரத்தில் எண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துப் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர், நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. அதில் முன்பே அரைத்து வைத்திருக்கும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேங்காய் கலந்த பசையைச் சேர்த்து, அதில் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
6. கடையாக அதில் தேவையான தண்ணீர் சேர்த்துக் கிளறிக் கொதிக்க வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.