பொங்கல் சாம்பார்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 200 கிராம்
2. தக்காளி-2 எண்ணம்
3. அவரைக்காய் - 6 எண்ணம்
4. பீன்ஸ் - 6 எண்ணம்
5. சேனைக்கிழங்கு - 1 துண்டு
6. வாழைக்காய் - 1 எண்ணம்
7. பரங்கிக்காய் - 1 துண்டு
8. பூசணிக்காய் - 1 துண்டு
9. சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1 எண்ணம்
10. கத்தரிக்காய் – 1 எண்ணம்
11. கேரட் – 2 எண்ணம்
12. சிறுகிழங்கு - 50 கிராம்
13. கருணைக்கிழங்கு - 50 கிராம்
14. பாகற்காய் - 50 கிராம்
15. வெண்டைக்காய் - 1 எண்ணம்
16. பட்டானிப் பயறு - 25 கிராம்
17. மொச்சைப் பயறு - 25 கிராம்
18. டர்னிப் - 1 எண்ணம் (மேலும் காய்கள் எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவு காய்களையும் பயன்படுத்தலாம்)
19. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
20. மல்லி - 1 தேக்கரண்டி
21. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
22. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
23. மஞ்சள்தூள் - சிறிது
24. பெருங்காயத்தூள் - சிறிது
25. உப்பு - தேவையான அளவு
26. வெல்லம் - சிறு துண்டு
27. புளி - நெல்லிக் காய் அளவு
28. சாம்பார் பொடி- 4 மேசைக்கரண்டி
29. எண்ணெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
1. எல்லாக் காய்களையும் நறுக்கித் தனித்தனியாக வைக்கவும்.
2. நறுக்கி வைத்த காய்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து, அதில் மஞ்சள்,உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் மல்லி, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், 2 மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுக்கவும்.
4. வறுத்து எடுத்தவற்றுடன் தேங்காய் துண்டுகள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து அதில் தக்காளியைச் சேர்த்து, மஞ்சள், சாம்பார் பொடி மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
6. குழம்பு கொதிக்கும் போது, வேக வைத்த மற்ற எல்லா காய்களையும் சேர்த்து வேக வைக்கவும்.
7. கொதித்து வரும் போது, அரைத்த தேங்காய் விழுதையும், வெந்த பருப்பையும் சேர்த்துக் கலக்கவும்.
8. வறுத்த தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து இறக்கவும்.
குறிப்பு
1. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கல் தினத்தன்று பச்சரிசிப் பொங்கலுக்கு வைக்கப்படும் பொங்கல் சாம்பார் இது.
2. இக்குழம்பு இரண்டு மூன்று நாட்கள் மீண்டும் மீண்டும் சுட வைத்துச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.