காளான் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 250 கிராம்
2. வெங்காயம் - 100 கிராம்
3. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
4. மிளகாய் - 3 எண்ணம்
5. மல்லி விதை- 1 மேஜைக் கரண்டி
6. மிளகு - 1/4 தேக்கரண்டி
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
8. தேங்காய் - சிறிது
9. எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
10. உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு
11. கருவேப்பிலை, மல்லித்தழை - தேவையான அளவு
(காளானை சிறிதாக நறுக்கி இலேசான சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தால் காளானில் இருக்கும் சிறு சிறு புழுக்கள் வெளியேறிவிடும்)
செய்முறை:
1.மிளகாய் வற்றல், மல்லி விதை, மிளகு, தேங்காய் ஆகியவற்றைச் சேர்து விழுதாக அரைத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம், நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றுடன் மசாலா விழுதையும் சேர்த்து வதக்கவும்.
3. வதங்கியவுடன் வெட்டிய காளானையும் சேர்த்து வதக்கி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
4. மணம் வரும்படி வெந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.