மிளகுக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
2. உளுத்தம்பருப்பு- 1தேக்கரண்டி
3. துவரம் பருப்பு-1தேக்கரண்டி
4. மல்லி - 1தேக்கரண்டி
5. மிளகாய் வற்றல் -10 எண்ணம்
6. மிளகு-1 தேக்கரண்டி
7. சீரகம்-1/2 தேக்கரண்டி
8. புளி - எலுமிச்சைபழம் அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய்- தேவையான அளவு
11. கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை:
1. புளியைச் சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
3. வறுத்த பொருட்களைப் பொடி செய்யவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அத்துடன் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றித் தூள் செய்த பொடியையும் போட்டுத் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
6. இக்கலவை நன்கு சேர்த்துக் கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
குறிப்பு:
கை படாமல் உலர்ந்த ஸ்பூன் கொண்டு இவற்றை உபயோகித்து வந்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.