எலுமிச்சை ரசம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சம் பழம் - 2 எண்ணம்
2. தக்காளி - 100 கிராம்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. பூண்டு - 2 பல்
6. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
7. மல்லித்தழை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் 300 மி.லி அளவுத் தண்ணீரில் தக்காளியைப் பிழிந்து விடவும்.
2. மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இலேசாகத் தட்டிப்போட்டு கொதிக்க வைக்கவும்.
3. நல்லெண்ணெய்யில் கடுகு, உளுந்து போட்டு தாளிசம் செய்து சேர்க்கவும்.
4. கடைசியில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேவையான உப்பு சேர்த்து கொதி வரும் நிலையில் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.