வடைகறி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கடலைப்பருப்பு - 1 கப்
2. துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
3. தக்காளி - 3 எண்ணம்
4. வெங்காயம் - 2 எண்ணம்
5. பூண்டு - 4 பல்
6. இஞ்சி - 1 துண்டு
7. மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணைய் - தேவையான அளவு
10. மல்லித்தழை - அரை கப் (பொடியாக நறுக்கியது).
செய்முறை:
1. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாய் போன்றவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஊறிய பருப்புடன் இஞ்சி, பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
4. அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவும்.
5. ஒரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
6. அதனுடன் மசாலாத்தூள், உப்பு, இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவும்.
7. பின்னர் அரைத்து வேகவைத்த மாவைக் கலந்து மீண்டும் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
8. நன்றாக வெந்ததும் இறக்கி அதில் நறுக்கிய மல்லித்தழையைத் தூவிவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.