புளி இஞ்சி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி - 1 கப் (நறுக்கியது)
2. புளி - பெரிய எலுமிச்சை அளவு
3. நல்லெண்ணைய் - 1/4 கப்
4. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - சிறிது
7. பெருங்காயத்தூள் - சிறிது
8. வெல்லம் - சிறிது.
செய்முறை:
1. இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
3. பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
4. ஒரு வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.
6. நன்கு வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவேண்டும்.
7. புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லத்தூள் சேர்த்து இறக்கவேண்டும்.
குறிப்பு: புளி இஞ்சியை வெண்பொங்கல், சாதம் போன்றவற்றுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.