கத்திரிக்காய் புளிக்குழம்பு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 5 எண்ணம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. பூண்டு - 10 பற்கள்
4. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
5. சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
7. புளி - சிறிய எலுமிச்சை அளவு
8. உப்பு - தேவையான அளவு
9. நல்லெண்ணை - தேவையான அளவு
10. கடுகு உளுந்து - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1.புளியை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
2. தேங்காய்த்துருவலைச் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. கத்திரிக்காய் காம்பினை நீக்கி விட்டு, பின்புறத்திலிருந்து நீளவாக்கில் முக்கால் பாகத்திற்கு நான்காக கீறவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. தாளிசத்துடன், சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்.
6. அத்துடன் பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
7. கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
8. கத்தரிக்காய் பாதி வெந்த நிலையில், புளியைக் கரைத்து அதில் உப்பு, சாம்பார் தூள் சேர்த்துச் சட்டியில் ஊற்றவும்.
9. குழம்பு கொதி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்துப் பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.