மோர்க் குழம்பு
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. வெண்டைக்காய் - 10 எண்ணம்
2. கெட்டியான கடைந்த மோர் - 150 மில்லி அல்லது 1 1/2 (ஒன்றரை கப்)
3. கடலைமாவு - 1 சிறிய மேசைக் கரண்டி
4. அரிசிமாவு - 1/2 சிறிய மேசைக் கரண்டி
5. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
6. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
7. தேங்காய் எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
8. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
9. கருவேப்பிலை - சிறிது
10. உப்பு - தேவையான அளவு
தாளிக்க வேண்டிய பொருட்கள்:
1. கடுகு - 1 சிறிய மேசைக் கரண்டி
2. உளுத்தம் பருப்பு - 1 சிறிய மேசைக் கரண்டி
3. கடலை பருப்பு - 1 சிறிய மேசைக் கரண்டி
4. வெந்தயம் - 1/2 சிறிய மேசைக் கரண்டி
5. சீரகம் - 1/2 சிறிய மேசைக் கரண்டி
செய்முறை:
1.வெண்டைக்காய், பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் மோர், கடலைமாவு, அரிசிமாவு,பெருங்காயத்தூள், மஞ்சள்பொடி சிறிது உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
3. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, போட்டு தாளிக்கவும்.
4. அதன் பின்னர் சீரகம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை போடவும்.
5. சில நிமிடங்கள் கழித்து வெட்டி வைத்துள்ள வெண்டைக்காயைப் போடவும். நன்கு வதக்கவும்.
6. கரைத்து வைத்துள்ள மோர்க் கரைசலை அதனுடன் சேர்க்கவும். பொங்கி நுரைத்து வரும் போது இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.