மசாலாக் கத்திரிக்காய் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கத்திரிக்காய் - 6 எண்ணம்
2. புளி - சிறிய எலுமிச்சை அளவு
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. பூண்டு - 5 பற்கள்
5. தக்காளி - 1 எண்ணம்
6. சாம்பார் தூள் - 1 மேசைக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
9. கசகசா - 1/2 தேக்கரண்டி
10. முந்திரிப்பருப்பு - 3 எண்ணம்
11. பட்டை - ஒரு சிறு துண்டு
12. சோம்பு - 1/2 தேக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. கறிவேப்பிலை - சிறிது
15. நல்லெண்ணெய் - தேவையான அளவு
16. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. புளியை ஊறவைத்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
2. கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காகக் கீறி விட்டு, அடிப்பாகத்தை வெட்டாமல் முழுதாக வைத்துக் கொள்ளவும்.
3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4. தேங்காய்த்துருவல், கசகசா, முந்திரி ஆகியவற்றுடன் சிறிது நீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கடுகு, சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
6. பின் அதில், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.
8. கத்தரிக்காய் நன்கு வதக்கியபின், தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
9. அதில் புளித்தண்ணீர், சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
10. குழம்பு கொதித்து, கத்தரிக்காய் நன்றாக வெந்தவுடன், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.