சுண்டைக்காய் வற்றல் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 6 எண்ணம்
2. புளி - சிறு எலுமிச்சை அளவு
3. சின்ன வெங்காயம் - 6 எண்ணம்
4. தக்காளி - 1 எண்ணம் (சிறியது)
5. பூண்டு - 10 பற்கள்
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
9. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
10. சுண்டைக்காய் வற்றல் - 25 கிராம்
11. கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
12. சீரகம் - 1/4 தேக்கரண்டி
13. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
14. பெருங்காயத்தூள் - சிறிது
15. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
16. கறிவேப்பிலை - சிறிது
வறுத்துப் பொடிக்க:
17. மல்லி - 1 தேக்கரண்டி
18. மிளகு - 1/2 தேக்கரண்டி
19. சீரகம் - 1/2 தேக்கரண்டி
20. கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி
21. வெந்தயம் -1/4 தேக்கரண்டி.
செய்முறை:
1. புளியைத் தண்ணீரில் நனைத்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய்யில்லாமல் வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க உள்ளப் பொருள்களை வரிசையாகப் போட்டுத் தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் பூண்டு, வெங்காயம், தக்காளி இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
7. இவையனைத்தும் நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
8. அதனுடன் கரைத்து வைத்திருக்கும் புளித்தண்ணீரை ஊற்றவும். தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
9. குழம்பைக் கலக்கி விட்டுக் கொதிக்க விடவும்.
10. ஒரு கொதி வந்ததும் முருங்கைக்காயைப் போட்டு மூடிக் கொதிக்க விடவும்.
11. காய் நன்றாக வெந்து வாசனை வந்த பிறகு பொடித்தப் பொடியைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.