வெங்காயத் தீயல்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. சிறிய வெங்காயம் - 250 கிராம்
2. புளி - எலுமிச்சைஅளவு
3. சாம்பார் பொடி - 1 சிறிய மேசைக் கரண்டி
4. தேங்காய் எண்ணெய் - 8 மேசைக் கரண்டி
5. கடுகு - 1 சிறிய மேசைக் கரண்டி
6. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
7. கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டிய பொருட்கள்:
1. நல்லமுற்றிய தேங்காய் - 1 எண்ணம்
2. மல்லிவிதை - 2 மேசைக் கரண்டி
3. கடலை பருப்பு - 2 மேசைக் கரண்டி
4. வற்றல் மிளகாய் - 8 எண்ணம்.
செய்முறை:
1.முதலில் தேங்காயைப் பூப்போல துருவிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 மேசைக் கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், மல்லிவிதை, கடலைப் பருப்பு, வற்றல் மிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். பின்னர் தனியாகத் தேங்காய் துருவலை மேலும் 1 மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக சிவக்க வறுக்கவும். ஆறியதும் முதலில் கொடுத்துள்ள சாமன்களை அரைக்கவும். அதன் பின்னர் தேங்காயைப் போடவும். அரைப்பதற்குத் தண்ணீர் சேர்க்கலாம்.
2. ஒரு பாத்திரத்தில் மீதி 6 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் முதலில் கடுகு,கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அதன்பின்னர் உரித்த சிறிய வெங்காயத்தை போடவும். நன்றாக வதக்கவும்.
3. புளியைக் கரைத்து ஊற்றவும். மஞ்சள்பொடி, உப்பு, சாம்பார்பொடி போடவும்.
4. புளி வாசனை போய், வெங்காயம் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
5. எல்லாம் கெட்டியாகச் சேர்ந்து நன்றாகக் கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.