மிளகு மோர்க் குழம்பு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மிளகு - 10 எண்ணம்
2. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
3. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
4. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. சேப்பங்கிழங்கு - 6 எண்ணம்
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. மோர் (கெட்டியாக) - 1/2 லிட்டர்
9. நல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, சீரகம் எல்லாம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2. கறிவேப்பிலையைத் தனியாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.
3. பின்பு அனைத்தையும் கெட்டியாக அரைத்து வைக்கவும்.
4. சேப்பங்கிழங்கு வேக வைத்துத் தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
5. அரைத்து வைத்ததை மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும்.
6. ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து மோருடன் சேர்க்கவும்.
7. வேகவைத்த சேப்பங்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.